Friday, 14 October 2016

விளித்திரைகள் விழித்தலென்ன !!!

விளித்திரைகள் விழித்தலென்ன,
அவ்விழி வழியே  நினைவலைகளும் நீந்தலென்ன !
அறை நிரம்பிய அரற்றலுமென்ன,
அங்கே இரவின் இருள் இறக்கும் ஓர் ஓசையுமென்ன !

கண் உறங்கா விடிவெள்ளிகளுமென்ன ,
கடல் அலைகளைத் தேடிடும் அக்காலைகளுமென்ன  !
கவியின் துணைக் கொண்டு மீழ்தலென்ன,
மீள் நிற்பின் ஓர் ஆற்றாமையின் பொருள் வந்து என்னை தூற்றலுமென்ன !

அழுதறிய என் விழிகளும் சில நேரம் சிவத்தலென்ன,
மனமும் வெறி கொண்டு கனவுவழி ஓட்டமெடுத்தலுமென்ன!
கனவும் நினைவாய் நிகழ்வாய் மாறுமன்றோ ,
அப்பயணத்தில் எதிர்படும் அத்தனையும் சில அர்த்தமுள்ளதன்றோ !

- ஷங்கர்