Saturday, 13 February 2016

நட்பிலே நிறைந்த நன்மக்கள்

நெடுந்தூரம் ஒரு பயணம்,
அது நட்பின் முடிவில்லா தருணம்,
வளைவுகளும் எங்களை வானிடாத்தே ஈர்த்து செல்ல,
மலைச் சாரல்களில் மனதினை தொலைத்த தருணம்!

பணியில் பல கருத்து வேற்றுமை வரின்,
அதை பணியிடே தொலைத்தால் நன்று,
வெறுப்புகள் மனதில் நிறைய நேரின், அதை வாசலிலே தொலைத்தல் நன்று !

நிரந்தரம் என்றும் இல்லாத ஐடி வாழ்க்கையில்,
இங்கே நிரந்தரமாய் நிலைப்பது நல் நட்புகளும் நினைவுகளுமே!

# நட்பிலே நிறைந்த நன்மக்கள்!

- ஷங்கர்

என்னுள் நிறைந்த என்னவள்

மலரொன்று பறித்திராத இந்த மனதையும் பறித்தவள் அவள்,
என்னை நிலவோடு தலையாட்டி உறங்கிட செய்பவள் அவள் !
இந்த வாழ்வினில் நிறைந்தித்த இன்பத்தை அளித்தவள் அவள்,
முகப்புன்னகையும் பூத்திட்ட புதுஉலகையும் அளித்தவள் அவள் !

மொழிகளினுள் உள்ள மௌனத்தை உணர்த்தியவள் அவள்,
என் மனதினின் குழப்பங்களை தீர்ப்பவள் அவள் !
என் வாழ்வின் இலக்குகளை தெளிய செய்தவள் அவள்,
அந்த இலக்கினை நோக்கி ஓட செய்பவள் அவள் !

எங்கள் வாழ்வின் கனவுகளையும் உணர்ந்தவள் அவள்,
அந்த கனவுகளை அடையும் வழிகளையும் அறிந்தவள் அவள் !
அவள் என் மனதிலும் வாழ்விலும் நீங்க நிறைந்தவள்,
அவள் என்றும் என்னுள் நிறைந்த என்னவள் !

# காதலில் நிறையும் பிப்ரவரி!

காதலர் தின நல்வாழ்த்துக்கள் ❤

- ஷங்கர்

Thursday, 4 February 2016

காதலில் நிறையும் பிப்ரவரி

முகம் பார்க்கும் கண்களும் ஒளியில் மிளிரும்,
மனம் பார்க்கும் உள்ளமும் காதலில் துளிர்க்கும்.
உடன் இருக்கும் நொடிகளில் நாட்களும் நிறையும்,
பிப்ரவரி காதல் உங்கள் வயதையும் குறைக்கும்!

கவிதையும் கடிதமாய் மாறிட தோன்றும்,
பேசும் நொடிகளும் சிரிப்பினில் வாழ்வினில் நிறையும்,
முத்தங்களும் மௌனத்தின் சத்தங்களை உணர்த்தும்,
அங்கே மொழிகளும் இன்றி ஒரு உரையாடல் தொடங்கும்!

இன்பமும் துன்பமும் ஆயிரம் வருகையில்,
இக்காதல் என்றும் களைய அன்பையே அளிக்கும்!

# காதலில் நிறையும் பிப்ரவரி!

- ஷங்கர்

Monday, 1 February 2016

தமிழுக்கு அமுதென்று பேர்

காதலின் அழகு ஊடல் என்பேன்,
எம்மொழியின் அழகு அது தரும் நிறைவு என்பேன்,
காதலின் நொடிகள் காற்றினில் நிறைந்தும்,
இம்மொழி மேல் புதுக்காதல் கொண்டது ஏனோ?

பன்மொழி வாழ்வில் பயிலும் போதும்,
இம்மொழியின் இனிமையை எங்கே காண்பேன்?
தேசம் பல சென்று வசிக்க நேரின்,
இம்மொழியினை ஸ்வாசமாய் ருசிக்க இயலுமோ?

எம்மொழியின் நடையில் ஒரு அழகை கண்டேன்,
இம்மொழியின் மேல் தீராக் காதல் கொண்டேன்,
இருளும் இங்கே இரவினில் நிறைய,
இம்மொழியின் ஓளி என்றும் மனதினில் நிறையும்!
- ஷங்கர்