Thursday, 4 February 2016

காதலில் நிறையும் பிப்ரவரி

முகம் பார்க்கும் கண்களும் ஒளியில் மிளிரும்,
மனம் பார்க்கும் உள்ளமும் காதலில் துளிர்க்கும்.
உடன் இருக்கும் நொடிகளில் நாட்களும் நிறையும்,
பிப்ரவரி காதல் உங்கள் வயதையும் குறைக்கும்!

கவிதையும் கடிதமாய் மாறிட தோன்றும்,
பேசும் நொடிகளும் சிரிப்பினில் வாழ்வினில் நிறையும்,
முத்தங்களும் மௌனத்தின் சத்தங்களை உணர்த்தும்,
அங்கே மொழிகளும் இன்றி ஒரு உரையாடல் தொடங்கும்!

இன்பமும் துன்பமும் ஆயிரம் வருகையில்,
இக்காதல் என்றும் களைய அன்பையே அளிக்கும்!

# காதலில் நிறையும் பிப்ரவரி!

- ஷங்கர்

No comments:

Post a Comment