Monday, 18 April 2016

கனவும் கவியும் இணைந்த இரவு

காற்றில் கலந்த இருளில்,
வெண்பனிகளாய் தோன்றும் சில பிம்பங்களை போல்,
மின் விளக்குகளால் ஆனா ஓளி மின்னல்களும்,
காற்றின் அடர்த்தியை கிழிக்கும் வாகனங்களும்,
விழித்திருக்கும் என் மனமும்,
ஒன்றாய் ஓடும் ஓர் இரவு இது!
ஒளியை விரட்டி வீழ்த்த முயலும் வாகனம் போல்,
மனமும் பல கனவுகளை விரட்டி வீழ்த்த துடிக்கும் பொழுதுகளில்,
இந்த விரட்டலில் சிக்கி உறங்கா உள்ளமும் உடலும்,
விழித்திருக்கும் ஓர் இரவு இது!
இரவுகள் பல இதுவரை விழித்திருந்த போதும்,
பொருள் நிறைந்த இரவுகள் வாழ்வினில் தோன்றி,
தூக்கங்களை துறக்க செய்யும் கனவு தேடலில்,
ஓர் கவியும் கனவும் ஒருங்கே இணைந்து பயணிக்கும் இரவு இது!
- ஷங்கர்

No comments:

Post a Comment