Monday, 18 April 2016

ஒளிரும் காலை பொழுதுகள்

தங்க பட்டுடுத்திய ஓர் தாரகை துயிலும் தருணம்,
அவள் மேல் படரும் காதலன் போல்,
பொன்னிற மேனியாய் பொங்கும் இக்கடலரசியை,
கதிரவனும் களவ முயல்வதும் ஏனோ?!
எதையோ தேடி தரை தீண்டும் இந்த கடல் அலைகளை போல்,
பல வினாக்களுக்கு விடை தேடும் இம்மனமும் விழித்து எழ,
அந்த அலைகளுக்கு ஒளி அழகை ஊட்டும் அந்த கதிரவன்,
இம்மனதிற்கும் ஓளி ஊட்டும் காலைப் பொழுதுகள்!
-ஷங்கர்
#
ஒளிரும் காலை பொழுதுகள்!

No comments:

Post a Comment