கடல் திரும்பிய கடற்காற்றும்,
ஓர் சுழற்காற்றாய் உருவெடுத்து கரை மோத,
அதன் வலிமை தங்கா முறியும் மரமாய்,
மனமும் சில நொடிகள் மயங்கி சாய்வதும் ஏனோ?!
ஓர் சுழற்காற்றாய் உருவெடுத்து கரை மோத,
அதன் வலிமை தங்கா முறியும் மரமாய்,
மனமும் சில நொடிகள் மயங்கி சாய்வதும் ஏனோ?!
எங்கோ ஒரு தூரத்தீவிலே,
கடல் கடந்த காதலும் கனவிலே தொடங்கி,
அது நினைவிலே நீண்ட நிஜங்களும் நொடிகளும்,
உறக்கமில்லா இந்த உன்னத இரவை நிறைத்தல் ஏனோ?!
கடல் கடந்த காதலும் கனவிலே தொடங்கி,
அது நினைவிலே நீண்ட நிஜங்களும் நொடிகளும்,
உறக்கமில்லா இந்த உன்னத இரவை நிறைத்தல் ஏனோ?!
பல நினைவுகளும் கலக்கங்களும் தோன்றி தீர்வதும் ஏனோ?!
அது பொன்னியின் செல்வனின் பூங்குழலியின் வரிகளை நினைவு செய்தல் ஏனோ?!
அன்றோ அவள் உரைத்தது போல்,
அலைக்கடலும் ஓய்ந்திருக்க,இந்த அகக்கடலும் குமுறுவது ஏனோ?!
அது பொன்னியின் செல்வனின் பூங்குழலியின் வரிகளை நினைவு செய்தல் ஏனோ?!
அன்றோ அவள் உரைத்தது போல்,
அலைக்கடலும் ஓய்ந்திருக்க,இந்த அகக்கடலும் குமுறுவது ஏனோ?!
-ஷங்கர்
# நீங்கா இரவுகள்
No comments:
Post a Comment